பசு மாட்டுக்கு பூஜை செய்த ரிஷி சுனக்!

0
522

பிரித்தானியாவுக்கான பிரதமர் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக் பசு மாட்டிற்கு பூஜை செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ரிஷி சுனக் பிரித்தானியாவில் உள்ள பக்தி வேதாந்த மனோர் கோயிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த பசு மாட்டுக்கு அவர் பூஜைகள் செய்தார். இதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்த இந்தியர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரையின் கடைசி நாட்கள் மிகக் கடினமானதாக இருந்ததாக அப்போது அவர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு பூஜையில் ரிஷி சுனக்கின் மனைவியும் இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தியின் மகளுமான அக்‌ஷதாவும் கலந்து கொண்டார்.