காதலனுடன் டேட்டிங் செல்லும் மகளை பாதுகாக்க ராணுவத்தை அனுப்பும் புடின்

0
514

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள் எப்போதெல்லாம் தமது காதலருடன் டேட்டிங் சென்றாலும் அவரது பாதுகாப்பிற்கு சிறப்பு ராணுவம் ஒன்றை அனுப்பி வைப்பதை வாடிக்கையாக புடின் செய்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் மகள் 35 வயதான கேதரினா டிகோனோவா ஜேர்மன் நாட்டவரான 53 வயது Igor Zelensky என்பவருடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

இருவரும் சுமார் நான்காண்டு காலம் முனிச் மற்றும் லண்டன் உட்பட பல்வேறு நகரங்களில் ரகசியமாக சந்தித்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் கேதரினா தமது காதலரை ரகசியமாக சந்திக்க செல்லும் போதும் சிறப்பு ராணுவம் ஒன்றை விளாடிமிர் புடின் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான மொத்த செலவும் பொதுமக்களின் வரிப்பணத்திலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்த கேதரினா உடன் 6 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பிற்கு சென்றுள்ளது.

மேலும், கேதரினாவின் நடவடிக்கைகள் எதுவும் பிரித்தானிய உளவுத்துறையாலும் கண்காணிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஸ்வீடன் சென்றிருந்த போதும் அவருடன் 10 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்புக்காக சென்றுள்ளது.

நடனக் கலைஞரான கேதரினா ரஷ்யாவின் மிக இளவயது கோடீஸ்வரரும் விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரின் மகனுமான 40 வயது Kirill Shamalov என்பவரை திருமணம் செய்திருந்தார்.

Kirill Shamalov

ஆனால் அந்த திருமணம் பிரிவில் முடியவே ஜேர்மானியரான பிரபல நடனக்கலைஞர் இகோர் ஜெலென்ஸ்கியுடன் நெருக்கமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Igor Zelensky