உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கிய ஜெர்மனி

0
243

ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பயணிகள் ரயில் சேவையை முதல்முறையாக ஜேர்மனி தொடங்கியுள்ளது.

ஜேர்மனியின் லோயர் சாக்சோனியில் புதன்கிழமை குறித்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. லோயர் சாக்சோனியில் இயங்கி வந்த 14 டீசல் ரயில்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஸ்டாம் நிறுவனம், எல்பே-வெசர் ரயில்வே ஆகியவை இணைந்து சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த வகை ரயில்களை உருவாக்கியுள்ளன.

இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சோதனை ஓட்டங்களுக்கு பின் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அல்ஸ்டாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், திட்டத்திற்கான மொத்த செலவு 92.3 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் முதற்கட்டமாக 6 மாகாணங்களில் ஹைட்ரஜன் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.