ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மீன்கள்

0
412

ஆர்க்டிக் பனிப்பாறையில் புதிய வகை மீன் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன்களுக்கு பிரகாசமான கண்கள் உள்ளதோடு இந்த மீன்களின் இரத்தத்தில் உள்ள ஃப்ரீஸ் எதிர்ப்பு புரதம் காரணமாக அவற்றின் நிறம் பிரகாசமான பச்சை நிறத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியரின் கருத்து 

அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளரும் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியருமான டேவிட் க்ரூபர் இந்த மீன்கள் குறித்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார்

பனிப்பாறைகளின் பிளவுகளில் வாழ்ந்த சில வகை மீன்களில் நத்தை மீன்களும் ஒன்றாகும்.ஆண்டிஃபிரீஸ் புரதங்கள் சிறிய பனி படிகங்களின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்கின்றன. அவை பெரிய மிகவும் ஆபத்தான, படிகங்களாக வளர்வதை குறைக்கின்றன அல்லது தடுக்கின்றன என்று க்ரூபர் கூறியுள்ளார். இவற்றின் கண்கள் பிரகாசிப்பதாலும், அரிதான தோற்றத்தினாலும், வேறு கிரகத்தின் மீன்கள் போல் காட்சி அளிக்கின்றன.

வடக்கு மற்றும் தென் துருவங்களைச் சேர்ந்த மீன்கள் இந்த புரதங்களை உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார். கிரீன்லாந்தில் நடந்த இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, கடல்வாழ் உயிரினங்களில் பரிணாம மாற்றங்கள் ஏற்படுவது தெளிவாகியுள்ளது. பிரகாசம் என்பது ஆர்க்டிக் பகுதியின் கடுமையான சூழ்நிலையில் உடல் வெப்பநிலையை பராமரிக்க உயிரினங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பண்பு என்று கருதப்படுகிறது.