சூரிய குளியலுக்குப் பின் உருகி பிளாஸ்டிக்காக மாறிய பிரிட்டிஷ் பெண்ணின் நெற்றி!

0
443

பல்கேரிய கடற்கரையில் சூரிய குளியல் போட்ட இளம்பெண் ஒருவரின் நெற்றி உருகி பிளாஸ்டிக் போல மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரித்தானியாவை சேர்ந்தவர் சிரின் முராத் (25). இவர் அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் பல்கேரிய கடற்கரையில், முகத்திற்கு எவ்வித சன்ஸ்கிரீம் போடாமல், அரைமணி நேரம் சூரிய ஒளியில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில் எழுந்து பார்த்த போது நெற்றியில் சிறிய புண் காணப்பட்டுள்ளதுடன் 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அருகிலிருந்த நீச்சல்குளத்தில் குளித்துள்ளார்.

அதற்கு அடுத்த நாள் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் சன்ஸ்கீரின் போடாமல் இருந்ததால், நெற்றி ஏறக்குறைய பிளாஸ்டிக் போல மாறியிருந்துள்ளது.  

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியம்

சம்பவம் தொடர்பில் சிரின் கூறுகையில்,” அடுத்த நாள் மிகவும் வலி எடுத்தது. ஆனால் அது உரிய தொடங்கியபோது எனக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைத்தது. அப்போது வலி இல்லை என்பதை நன்றாக உணர்ந்தேன்.

சின்னதா சூரிய குளியல் போட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! | Sunbathing British Woman S Condition

வித்தியாசமாக தோல் இப்போது நன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டதை போல முன்பை விட நன்றாக உணர்கிறேன்” என்றார். நெற்றியில் உள்ள தோல் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் உரிய தொடங்கிய போது பிங்க் நிறத்தில் தோல் மாற துவங்கியுள்ளது.

சருமம் உரிய தொடங்கியபோது சிறிது நிவாரணம் கிடைத்துள்ளது. அதன் பின்னர் இயல்பான தோற்றத்தை அடைய ஏழு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது.

சின்னதா சூரிய குளியல் போட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! | Sunbathing British Woman S Condition

இப்போது சிரினின் கன்னங்கள் மற்றும் கண்களுக்கு கீழ் பகுதியில் நிறமாற்றங்கள் மட்டுமே உள்ளன. அதேவேளை சூரிய ஒளியில் நேரடியாக நிற்கும் சூழல் வந்தால், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியம்.

இது புறஊதா கதிர்களில் இருந்து முகத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், சுருக்கங்கள், தேவையற்ற நிறமி உள்ளிட்ட சரும பாதிப்புகளையும் தடுப்பதால் பரிந்துரைக்கப்படுகிறது.