நேர்காணல் கேள்வியால் பெரும் இழப்பீடு கொடுத்த டோமினோ நிறுவனம்!

0
599

டோமினோவின் வேலைவாய்ப்பு நேர்காணலில் வயது தொடர்பான கேள்வியின் விளைவாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணுக்கு £4,250 இழப்பீடு கிடைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு அயர்லாந்தில் நேர்காணலுக்கு வந்த பெண்ணிடம் வயது மற்றும் அவரது பாலினம் குறித்து கேட்ட கேள்வியால் நேர்காணலுக்கு அழைத்த நிறுவனம் பெரும் தொகை இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஜெனிஸ் வால்ஷ் (Janice Walsh) என்ற பெண் பீஸா நிறுவனம் ஒன்றுக்கு ஓட்டுநர் பணிக்கான நேர்காணலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் இடையே அவரது வயது மற்றும் பாலினம் குறித்த கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

நேர்காணல் கேள்வியால் பெரும் தொகை  இழப்பீடு  வழங்கிய நிறுவனம்! | Huge Amount Compensation By Question

அந்த கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு வந்த ஜெனிஸ் வால்ஷ் (Janice Walsh)பணிக்கு தெரிவாகவில்லை. இந்த நிலையில், நேர்காணலின் தொடக்கத்திலேயே தனது வயது மற்றும் பாலினம் கேள்விகள் கேட்டு அதனால் தான் நிராகரிக்கப்பட்டு விட்டதாக ஜெனிஸ் உணர்ந்துள்ளார்.

நேர்காணல் கேள்வியால் பெரும் தொகை  இழப்பீடு  வழங்கிய நிறுவனம்! | Huge Amount Compensation By Question

அதன் பின்னர் சமூக வலைத்தளம் வழியாக தகவல் அனுப்பிய ஜெனிஸ் (Janice Walsh) அதில் வயது அடிப்படையில் தனக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக உணர்வதாக கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் நேர்காணல் குழுவினர்களில் ஒருவர் ஜெனிஸிடம் (Janice Walsh) மன்னிப்பு கேட்டுள்ளார்.

அது மட்டுமால்லாது குறித்த நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான ஜஸ்டின் குயிர்க் 4,250 பவுண்ட்களை ஜெனிஸிற்கு (Ms Walsh) இழப்பீடாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.