ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவிக்கு வராத நிலையில் உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் ரஷ்யா மூன்று முறை தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 175 நாட்களை கடந்து, தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் போர் தாக்குதலில் ரஷ்யா முன்று முறை ஹைப்பர்சோனிக் கின்சல் hypersonic Kinzhal (Dagger) ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ( Vladimir Putin) ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் ஒற்றை பகுதியாக கின்சல் ஏவுகணைகளை நாட்டிற்கு வழங்கினார்.
இந்த கின்சல் ஏவுகணைகள் உலகின் எந்த புள்ளியையும் தாக்கும் சக்தி கொண்டது என்பதுடன் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்புகளையும் உடைத்து முன்னேறும் ஆற்றல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) , கின்சல் ஏவுகணைகள் உக்ரைனில் மூன்று முறை அதிக மதிப்புள்ள இலக்குகளை தாக்கி அதன் திறமையை நிறுபித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கின்சல் ஏவுகணைகளை பறக்கும் போது வீழ்த்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் அவர் (Sergei Shoigu) கூறினார்.