புடினின் மூளையாக செயல்பட்டவரின் மகள் மரணமா?

0
453

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் விபத்தில் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.

புடினின் நெருங்கிய உதவியாளரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா, மாஸ்கோவில் பயணித்த கார் வெடித்ததில் கொல்லப்பட்டிருக்கலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள ஓடிண்ட்சோவ்ஸ்கி மாவட்டத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது என்ற செய்தி வெளியானது.

இந்த விபத்தில் ரஷ்ய அரசியல் தத்துவவாதியும் ஆய்வாளருமான அலெக்சாண்டர் டுகின் மகள் உயிரிழந்திருக்கலாம் என ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்திற்கு டுகின் வந்ததாகவும் கூறப்படுகிறது.

கிரிமியா மற்றும் உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னால் இருந்தவர் அலெக்சாண்டர் டுகின் என்று கூறப்படுகிறது.

டுகின் சில மேற்கத்திய ஆய்வாளர்களால் “புடினின் மூளையாக செயல்படுபவர்” என்று அடிக்கடி விவரிக்கப்படுகிறார்.

டுகின் 2014 மற்றும் 2015 இல் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் கனடாவால் தடை விதிக்கப்பட்டவர். டுகினின் மகள் டாரியா டுகினா இந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தால் தடை விதிக்கப்பட்டவர் ஆவார்.