எரிபொருள் விநியோகத்தில் குறுக்கீடு; அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

0
621

இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் அனுமதி (QR) வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிபொருள் நிலையங்கள் இணங்கத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எரிபொருள் விநியோகம்  இடைநிறுத்தம்; அமைச்சரின் அதிரடி அறிவிப்பு! | Interruption Of Fuel Supply Minister S Action

பொதுமக்கள்  முறைப்பாடு

இதற்கமைய 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.