தைவானில் இன்று நடப்பது என்ன?

0
651

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த 3ம் திகதி தைவானுக்கு சென்றதைத் தொடர்ந்து தைவானுக்கு எதிரான சீன அரசின் நடவடிக்கைகளால் பதற்றம் நீடித்து வருகிறது.

தைவானில் இன்று நடப்பது என்ன? தெரிந்துகொள்ளவேண்டிய 10 முக்கிய தகவல்கள் | Taiwan Problem Today10 Important Facts To Know

தைவானில் இன்று என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • இரண்டாம் உலக போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிளவு ஏற்பட்டது. தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன. தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.
  • தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை. இந்த நிலையில், அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் (இந்தியாவின் மக்களவை போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டது) சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த 3ஆம் தேதி தைவானுக்கு சென்றார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியிருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்ட மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி ஆவார்.

இன்று நடப்பது என்ன?

தைவானில் இன்று நடப்பது என்ன? தெரிந்துகொள்ளவேண்டிய 10 முக்கிய தகவல்கள் | Taiwan Problem Today10 Important Facts To Know
  • நான்சி பெலோசி தைவானுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த இரு தினங்களாக தைவானைச் சுற்றி சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்று தைவானைச் சுற்றி பெரிய அளவிலான போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டுள்ளது.
  • சீன போர் விமானங்களும், கண்காணிப்பு கப்பல்களும் தைவானின் கடல் எல்லையைக் கடந்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது தைவான்.
  • ஏவுகணை அமைப்புகளை தைவான் தனது எல்லையில் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது. விமானங்களும் கப்பல்களும் எல்லையை ஒட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.
  • எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் போரிட தங்களுக்கு விருப்பமில்லை எனவும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • இதனிடையே தைவானைச் சுற்றி சீனக் கப்பல்களும் விமானங்களும் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. ஜப்பானில் பேசிய பெலோசி, அமெரிக்க அரசியல்வாதிகள் அங்கு செல்வதைத் தடுப்பதன் மூலம் தைவானை சீனா “தனிமைப்படுத்த முடியாது” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
  • தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ பிபிசியிடம் “சீனாவின் விரிவாக்கவாத கனவின் கடைசி துண்டாக தைவான் இருக்கப்போவதில்லை” என்று கூறினார்.
  • தைவானைச் சுற்றி சீனாவின் ராணுவப் பயிற்சிகள் “நியாயமற்றது” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
  • அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ இதுதொடர்பாக கூறுகையில்,

தைவானில் இன்று நடப்பது என்ன? தெரிந்துகொள்ளவேண்டிய 10 முக்கிய தகவல்கள் | Taiwan Problem Today10 Important Facts To Know

“சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் பெலோசி தீவிரமாக தலையிட்டுள்ளார். இது சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை கடுமையாக பாதித்துள்ளது.

இது சீனாவின் ‘ஒரே சீனா கொள்கை’யை காலில் போட்டு மிதிப்பதாக உள்ளது. தைவானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.