காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 10 பேர் உயிரிழப்பு

0
113

இஸ்ரேல் ராணுவத்திற்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் அடிக்கடி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் தொடுத்த இஸ்ரேல்! 10 பேர் உயிரிழப்பு | Israel Launched An Airstrike In The Gaza Strip

இந்த நிலையில் நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. உயரமான கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து புகை வெளியேறும் காட்சி குறித்த வீடியோ வெளியானது.

காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் தொடுத்த இஸ்ரேல்! 10 பேர் உயிரிழப்பு | Israel Launched An Airstrike In The Gaza Strip

தில் மூத்த போராளி உள்பட 10 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்கள் இஸ்லாமிய ஜிகாத் போராளிகளை குறி வைத்து நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

காசா மீதான தாக்குதலுக்கு பிறகு தேசிய தொலைக்காட்சி உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் யாசிர் லாபிட் தனது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் தொடுத்த இஸ்ரேல்! 10 பேர் உயிரிழப்பு | Israel Launched An Airstrike In The Gaza Strip

காசாவில் இருந்து இஸ்ரேல் எல்லையை நோக்கிய எந்தவொரு தாக்குதல் முயற்சியையும் தமது அரசு முறியடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்களை கண்டு இஸ்ரேல் சும்மா இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.