ரஷ்யாவின் 50 ஆயுதக் கிடங்குகளை அழித்த உக்ரைன்!

0
436

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஹிமார்ஸ் எனப்படும் அதிநவீன ராக்கெட் லாஞ்சர் மூலம் உக்ரைன் ராணுவம் நடத்திய ரஷ்யாவின் 50 ஆயுதக்கிடங்கை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் 150 நாட்களை கடந்துவிட்ட நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ரஷ்யாவின் 50 ஆயுதக்கிடங்கை தரைமட்டமாக்கிய உக்ரைன்! | Ukraine Destroyed50 Of Russia S Arsenal

இந்நிலையில், உயர் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பான ஹிமார்ஸ் மூலம் குறிவைத்து உக்ரைன் படை வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் ரஷ்யாவின் 50 ஆயுதகிடங்கு தகர்த்தப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.