ட்விட்டரில் சிக்கிய எலன் மஸ்க்!

0
731

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்துள்ளதோடு 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் (Elon Musk) விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு (Elon Musk) மாற்றும் பணிகள் நடைபெற்று வந்ததுள்ளது.

இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் (Elon Musk) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் (Elon Musk) கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்துள்ளது.

டுவிட்டரிடம் சிக்கிக்கொண்ட எலன் மஸ்க்! | Elon Musk Sued

இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் (Elon Musk) கடந்த 9-ம் திகதி அதிரடியாக அறிவித்ததோடு அவர் கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தராததாலும் ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் (Elon Musk) அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் (Elon Musk) கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் (Elon Musk) மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.

மேலும் இந்த வழக்கு டெல்லவிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்குமாறு எலான் மஸ்க் (Elon Musk) தரப்பில் வாதிடப்பட்டதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என நீதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.