சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்த Netflix நிறுவனம்!

0
830

ஓ.டி.டி.தளத்தின் முன்னணி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நடப்பு ஆண்டின் 2-வது காலாண்டில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருக்கும் நிலையில் பங்குச்சந்தையிலும் அந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பயனர்கள் தங்கள் நெட்ஃபிக்ஸ் பாஸ்வர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே இழப்புக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது தொடர் வீழ்ச்சியை ஈடுகட்டவும் மேலும் அதிக பயனர்களை தளத்திற்கு கொண்டு வரவும் மலிவு விலை சந்தாவை அறிமுகப்படுத்தி நடுவில் விளம்பரங்களை தோன்ற செய்து வருமானம் ஈட்ட முடிவெடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நெட்ஃபிளிக்ஸ் கை கோர்த்துள்ளது.