தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கதறி அழுத நடிகை மீனாவின் மகள்!

0
577

தந்தையின் இறுதி ஊர்வலத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா கதறி அழுத பார்ப்போர் கண்களில் கண்னீரை வரவழைத்துள்ளது.

1990 களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் மீண்டும் அண்ணாத்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்திருந்தார்.

இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல தொழிலதிபராகிய வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

நைனிகா தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக உய்ரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கதறி அழுத நடிகை மீனாவின் மகள்! | Meena S Daughter Cries At Father S Funeral

திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.   

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெறும் நிலையில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.