கோட்டாபயவுக்கு நெருக்கமான ஞானசார தேரர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

0
442

கடும்போக்குவாத சிந்தனை கொண்ட சர்ச்சைக்குரிய நபரான பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இலங்கையை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் டுபாயில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

இந்நிலையில் அவர்களின் ஆதரவாளர்களாக செயற்பட்டவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர்.

கடந்த காலங்களில் கோட்டபாய ராஜபக்ஷவின் தேவைகளுக்கான பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் ஞானசார தேரர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery