உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போது எரிந்த கட்டடங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக கூறப்படுகின்றது. ரஷ்யாவில் தாக்குதலில் சிதைவடைந்த நகரின் தற்போதைய நிலையை கண்டு மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
மரியுபோலில் இருந்த கடைசி உக்ரேனியத் துருப்புக்கள் ரஷ்யர்களிடம் சரணடைந்ததால், மக்கள் தங்களின் அவல நிலையை எண்ணி வருந்துகின்றனர்.
மரியுபோல் நகரில் வசிப்போர் கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து மின்சாரமின்றி தவித்து வருவதுடன், வேலை இல்லாமல் உணவும் தண்ணீரும் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மரியுபோலில் மூன்று மாதமாக இடம்பெற்ற போரில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷ்யாவால் சிதைக்கப்பட்ட உக்ரேனின் தென்கிழக்கு நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், அதைக் கடலோர உல்லாசத்தலமாக மாற்றவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது.
அதேவேளை மரியுபோல் நகரில் முந்திய வாரங்களில் இடைவிடாது நடந்த போர் தற்போது குறைந்துவிட்டன எனினும் நகர் முழுவதும் ரஷ்ய ராணுவக் கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.