பொருளாதார ஸ்திரத்தன்மை அடையும் சாத்தியப்பாடுகள்!

0
650

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விரையில் சாதகமான நிலையை எட்டும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகள் வெற்றியடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்துடான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் அடுத்த 12 மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை அடையும் சாத்தியப்பாடுகள் தென்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.