நாடுகள் பலவற்றில் பரவிச் செல்லும் குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் தேவையற்ற பீதியடைய அவசியமில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரை உலகளாவிய ரீதியாக குரங்கம்மை நோய் காரணமாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய் அறிகுறி தொடர்பில் சாதாரண பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். தற்போது உலக நாடுகளில் குறைந்த வீரியம் கொண்ட நோயாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.
இலங்கை மக்கள் இது தொடர்பில் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த நோயானது காய்ச்சல், தலைவலி, உடல்வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் மூலமே ஏற்படக் கூடும்.
மேலும் கொவிட்-19 நோயை போன்ற வேகமாக பரவக் கூடிய வல்லமையை இந்த கொண்டிருக்காது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர தெரிவித்துள்ளார்.