இலங்கைக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
91

 இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவர்கள் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருந்ததாக மருத்துவர்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

80 வீதமான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் , அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, மருந்து இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல மருந்துகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.