அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனை, அமைச்சரவையில் சமர்ப்பித்ததன் பின் மீண்டும் சட்டமா அதிபரின் அனுமதி பெற்று வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிக அதிகாரங்கள், நாடாளுமன்றுக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது போன்ற அரசியலமைப்பு திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.