அலரிமாளிகையை நிராகரிக்கும் பிரதமர் ரணில்!

0
79

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு தாம் வசிப்பதற்காக செல்லப்போவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அலரி மாளிகைக்கு செல்லாமல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்தே அவர் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அலுவலகத்தின் செலவை நூற்றுக்கு 50 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்து அதுதொடர்பான பணிப்புரைகளையும் ஏற்கனவே வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் செலவை குறைப்பது தமக்கும் பொருந்தும் என்பதை வெளிப்படுத்துவதற்காக அவர் இவ்வாறு தீர்மானித்துள்ளார்.

அதேவேளை நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் குடியிருப்பதற்காக செல்லவில்லை என்றும் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக மட்டுமே அலரி மாளிகையை உபயோகப் படுத்தியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.