இன்றைய ராசிபலன் (21 மே 2022)

0
1027

மேஷம்

மேஷ ராசிக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் கிடைக்கும். சரியான திட்டமிடலும், புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் வேலைகளை எளிதாக முடிக்கலாம். நீதிமன்றம் தொடர்பான வழக்கு விஷயங்களில் ஓரளவுக்கு நிம்மதி பெறலாம். புதிய தொழில் தொடங்கவும், வேறு புது வேலைக்கு செல்லவும் திட்டமிடுவீர்கள்.குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

இன்று 82% அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். லட்சுமி தேவியை வணங்குங்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு பணியிடத்தில் சற்று அனுகூலமான நாளாக இருக்கும். எல்லோருடனும் சுமுகமான உறவைப் பேணுவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பதவி உயர்வும் ஏற்படலாம். நிரந்தர வேலை தேடும் முயற்சியில் இளைஞர்கள் வெற்றி பெறுவார்கள். இளைஞர்கள் விரும்பிய வாழ்க்கைத்துணை கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும்.

இன்று 85% அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.. பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்.

மிதுனம்

மிதுனம் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை முன்னேற்றம் தருவதாக இருக்கும். பண பரிவர்த்தனையால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். வீடு, மனை, வண்டி என சொத்து வாங்குதல் போன்ற விஷயங்களில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் சொத்து வாங்கும் விவகாரங்களில் கவனமாக செயல்படவும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை பெறக்கூடிய நாளாக இருக்கும்.

இன்று 60% அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களின் உடல்நிலை இன்று சற்று மோசமடையக்கூடும், இதனால் உங்கள் நாள் முழுவதும் ஓய்வின்றி இருப்பீர்கள். உத்தியோகத்தில் ஒருவரின் ஆதரவு உங்களுக்கு சாதகமான பலன் தரும். எந்த ஒரு வேலையையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகள் உங்களை இழிவுபடுத்த முயற்சி செய்யலாம். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முன்னேற்றம் காண கடினமாக உழைப்பீர்கள்.

இன்று 72% அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மூத்தவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். முக்கியமான செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். பணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். பழைய நண்பர்களை சந்தித்து உரையாட வாய்ப்புகள் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

வேலையில் புத்திசாலித்தனத்தைக் காட்டி வெற்றி பெறுவீர்கள். அதிக கோபம் பிரச்சனையை அதிகரிக்கும். எந்த பழைய முதலீட்டிலும் லாபம் பெறலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் சிறந்த அனுபவத்தை பெறலாம்.

இன்று 92% அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். விநாயகர் வழிபாடு செய்யவும்.

கன்னி

கன்னி ராசிக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகளையும் பெறலாம்.

நண்பர்கள், உறவினர் வகையில் நன்மை பயக்கும். குடும்பத்தில் உங்கள் நேர்மறையான நடத்தை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

இன்று 84 % அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சிவ வழிபாடு செய்யவும்.

துலாம்

இன்று துலாம் ராசிக்கு ஏற்ற இறக்கமான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். வீட்டில் அன்பும், புரிதலும் காணப்படும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

தொழிலதிபர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் காதலியுடன் சில பிணக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் சம்பந்தமான சில விஷயங்களில் மன அழுத்தம் குறையும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும்.

இன்று 85% அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சரஸ்வதி வழிபாடு செய்யவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு இன்று சாதகமற்ற நாளாக இருக்கும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்ட வேண்டிய நிலை இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். இன்று பிறருக்குக் கொடுத்த பணத்தை திரும்ப பெற வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கைத் துணையுடன் சில புதிய திட்டமிடல்களைச் செய்வீர்கள். தான, தர்மம் செய்வது, உதவுவது நல்லது. இறைவனை வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கவனமாக இருங்கள்.

இன்று 95 % அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருட்களை தானம் செய்யுங்கள்.

தனுசு 

இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மூத்தோர் வழிகாட்டுதலை பின்பற்றுவதும், முன்னோர் வழிபாடு செய்வதும் நற்பலனைத் தரும். புதிய வழிகளில் லாபம் கிடைக்கும். தேவையற்ற மன சலனங்களிலிருந்து விலகி இருக்கவும். உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். எதிலும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் சிலருடன் தேவையான சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்று 72% அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று மற்றவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும். மனதில் புதிய முயற்சியில் ஆர்வமும், உத்வேகமும் இருக்கும். உணவு, பான வியாபாரிகளுக்கு நல்ல நேரம். பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

இன்று 95% அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உளுந்து தானம் செய்யவும்.

இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக 95% இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்கு வெற்றி தரக்கூடிய நாள். பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மாணவர்கள் சிறப்பாக கல்வியில் செயல்படுவார்கள். ஒருவித பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாத வண்ணம் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஒழுக்கத்தையும், சட்ட வித்தைகளையும் கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

இன்று அதிர்ஷ்ட சதவீதம் 92%. ஹனுமான் வழிபாடு செய்யவும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் சிறு விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். வணிகத்தில் புதிய திட்டங்களைப் பயன்படுத்துவீர்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். உறவுகளில் புத்துணர்ச்சி ஏற்படும். முக்கியமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தாயுடன் நேரத்தை செலவிடுவது நல்லது.

இன்று உங்கள் அதிர்ஷ்ட சதவீதம் 85% இருக்கும். விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்.