எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணிற்கு 94 இலட்சம் அளித்ததாக தகவல்!

0
201

எலான் மஸ்க் (Elon Musk) மீது தகாத முறை குற்றச்சாட்டு சுமத்திய விமானப் பணிப்பெண்ணிற்கு அவரது SpaceX நிறுவனம் ஒரு கோடியே 94 லட்ச ரூபாய் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2016 ஆம் ஆண்டு, SpaceX நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண்ணிற்கு எலான் மஸ்க் (Elon Musk) தகாத முறையில் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து புகாரளிக்கப் போவதாகத் அந்த பெண் தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு 2 லட்சத்து 50,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இதில் துளியும் உண்மை இல்லை என தன்னை டுவிட்டரில் பின்தொடரும் ஒருவருக்கு எலான் மஸ்க் (Elon Musk)பதிலளித்துள்ளார்.

அண்மை காலமாக ஜோ பைடன் (Joe Biden) நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வரும் எலான் மஸ்க் (Elon Musk)தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறுகள் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.