எம்பிமாருக்கு எரிபொருள் வழங்க பணிப்புரை!

0
181

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பணிப்புரையை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன வழங்கியுள்ளார்.

அதன்படி பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட நாரஹேன்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தற்காலிகமாக எரிபொருளை வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும்போது எம்பி வாகனத்தில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.