பிரான்ஸில் பீட்சா சாப்பிட்ட தாயாரிடம் , பால் குடித்த ஒன்பதுமாத குழந்தை ஒன்று கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் , இருபது நாள் செயற்கைக் கோமாவில் இருந்து அனாயா என்ற ஒன்பது மாதப் பெண் குழந்தை மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி உஷான் (Auchan) பல்பொருள் அங்காடியில் வாங்கிய பீட்ஸாவை உண்டுள்ளனர்.
இதனையடுத்து அடுத்த சில நாட்களில் தாய்க்கும் 9 மற்றும் 22 வயதுடைய அனாயாவின் சகோதரிகள் இருவருக்கும் நோய்த் தொற்று அறிகுறிகள் தோன்றியுள்ளன.
குழந்தை அனாயாவுக்கு பீட்ஸா உண்ணக் கொடுக்கவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார். எனினும் நோய் அறிகுறிகள் அந்தக் குழந்தையிலும் தோன்றின. பெப்ரவரி 18 ஆம் திகதி குழந்தை அனாயா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்க்பபட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் ஈ-கோலி பக்ரீரியாத் தொற்றை உறுதி செய்துள்ளனர்.
இதன்போது குழந்தையின் சிறுநீரகம் உட்பட உறுப்புகள் செயலிழப்பதைத் தடுப்பதற்காக அவசரமாக அவரை செயற்கைக் கோமாவில் ஆழத்த மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பியூரோனி என்ற தயாரிப்பு பெயரிலான (Buitoni brand) ப்ரைஸ்அப் றோன்ஜ் (FraichUp pizza) உணவில் கண்டறியப்பட்ட பக்ரீரியாவே அனாயாவின் உடலிலும் பரவியுள்ளதாக பிரான்ஸின் பொதுச் சுகாதாரத்துறை அவரது பெற்றோருக்கு அறிவிக்கிறது. இந்நிலையில் தற்போது அனாயா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் அவரது உடல் நிலை எதிர்காலத்தில் என்னவாகும் என்ற அச்சம் நீடிக்கிறது. அதேசமயம் பீட்ஸா உண்ணாத குழந்தைக்கு எப்படிப் பக்ரீரியா பரவியதென ஆராய்ந்த தாய்ப்பால் மூலம் தாயிடம் இருந்தே கிரிமி குழந்தைக்குத் தொற்றியதாக நம்பப்படுகிறது. அதேவேளை பிரான்ஸில் நாற்பதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இவ்வாறு ஈ-கோலி பக்ரீரியாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெஸ்லே தயாரிப்பான ப்ரைஸ்அப் றோன்ஜ் மூலமே அது பரவியிருப்பதை அரச மருத்துவ நிபுணர்கள் உறுதிசெய்துள்ளதாக கூறப்படும் நிலையில், உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்கள் நீதி கோரி வழக்குத் தொடுத்து வருகின்றனர்.h
இந்நிலையில் அனாயாவின் பெற்றோரும் தங்கள் பகுதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய் திருக்கின்றனர். அதேவேளை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் பீஸ்ஸா தொடர்புடைய இரண்டு குழந்தைகளது மரணங்கள் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன், மிகக் கொடூரமான மனித துயரம் என்று அவர் அதனைகுறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரான்ஸின் வடபகுதியில் உள்ள பியூரோனி (Buitoni) பீஸ்ஸா தொழிற்சாலையில் சுகாதார சீர்கேடுகள் பல கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அதன் நிர்வாகம் மீது பாரிஸ் சட்டவாளர் அலுவலகம் வழக்கு தொடங்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.