கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சஜித்!

0
197

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்(David McKinnon) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நிலைமை மற்றும் இதிலிருந்து நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.