கொழும்பில் உருவானது மற்றுமொரு புதிய போராட்டம்!

0
224

“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, “நோ டீல் கம” என்ற புதிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகைக்கு முன்பாகவே “நோ டீல் கம” உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்துக்கு பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகைக்குச் சென்று இன்று காலை அவர், தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையிலேயே அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து “நோ டீல் கம” உருவாக்கப்பட்டுள்ளது.