உக்ரைனுக்கு அதிரடி விஜயம் மேற்கொண்ட கனேடிய பிரதமர்

0
102

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவசரமாக உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளார். ரஸ்ய உக்ரைன் யுத்தம் இடம்பெற்று வரும் பின்னணியில் கனேடிய பிரதமர் உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் மக்களுக்கு கனடாவின் ஆதரவினை தெரிவிக்கும் நோக்கில் இந்த திடீர் விஜயத்தை பிரதமர் ட்ரூடோ மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் ட்ரூடோ, உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஸெலன்ஸ்கீயுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.

உக்ரைனின் தலைநகர் கியூவின் புறநகர்ப் பகுதிகளில் கனேடிய பிரதமர் விஜயம் செய்திருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

உக்ரைன் யுத்தம் தொடர்பில் ஜீ7 நாட்டு தலைவர்களுடன் மெய்நிகர்த் தொழில்நுட்பத்தில் பேச்சுவார்த்தை நடாத்தவும் பிரதமர் ட்ரூடோ திட்டமிட்டுள்ளார். 

கனடாவின் ஆதரவினை உக்ரைன் மக்களுக்கு வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.