ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பாக உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், பொதுஜன முன்னணி இடைக்கால அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தது.
பொதுஜன பெரமுனவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் நாளை அல்லது நாளை மறுதினம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், 39 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.