இன்றைய ராசிபலன் (03 மே 2022) : Daily Horoscope, May 03

0
810

மேஷம்

மேஷ ராசிக்கு இன்று பலவேறு சிரமங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். சில விஷயங்களை நினைத்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். சரியான நேரத்தில் வேலை முடிக்க முடியாமல் போகலாம் என்பதால், உங்கள் வேலையை சரியாக திட்டமிடுவது அவசியம்.

உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். தீடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுப காரியங்களுக்கான செலவுகள் செய்யவும். தொழில், வியாபார ரீதியான முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்

குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை இருக்கும். உங்கள் பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காதல் விவகாரங்களின் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

இன்று குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை இருக்கலாம், உங்கள் பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்று ரிஷபம் ராசிக்காரர்களிடம் கணேஷ்ஜி கூறுகிறார். காதல் விவகாரங்களுக்கு ஏற்ற காலம். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும், மகிழ்ச்சி அடையும். சம்பளம் பெறுபவர்கள் தங்கள் திறமை மற்றும் புரிதலுடன் அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் உதவியையும் பெறலாம்.

மிதுனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை லாபகரமானதாகவும், முன்னேற்றம் தரக்கூடியதாகவும் இருக்கும். உங்களுக்கு புதிய அனுபவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் முழு நம்பிக்கையுடனும், ஆற்றலுடனும் செயல்பட்டால் நல்ல லாபத்தைப் பெற்றிடலாம்.

புதிய வணிகத் திட்டங்களை செயல்படுத்த நல்ல நேரமாக இருக்கும்.குடும்ப சூழ்நிலை காரணமாக சில மன அழுத்தமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். அதனால் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையைக் கூட அனுபவிக்க முடியாமல் போகலாம்.

கடகம்

நீங்கள் அனைத்து செயல்களிலும் பிரகாசிப்பீர்கள், அதிர்ஷ்டம் உங்களை உச்சத்திற்கு கொண்டு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு வேலையும் சிறப்பான செய்து வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பும், அதிர்ஷ்டமும் ஒரு சேர இருப்பதால் நல்ல வளமான பலனைப் பெற்றிடுவீர்கள். நிதி நிலை நன்றாகவே இருக்கும். சொந்த தொழில் செய்யக்கூடியவர்கள் தொழில் விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது. உள்ளவர்களுக்கு திடீர் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்

இன்று நீங்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய நாள். சில உடல்நலப் பிரசனைகளில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் மூத்த நபர்களுடனும், பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் பேச்சை கேட்டு நடக்கவும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு, நிதானித்து நடக்கவும்.

நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடையே அமைதியின்மையான சூழல் இருக்கும் என்பதால் கவலையடையச் செய்யும்.

​கன்னி

கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியான வளம் கிடைக்கும். உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். வியாபாரம் விரிவடையும். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்ல வாய்ப்புள்ளது. அவர்களின் நல் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும்.

​துலாம்

உங்களின் தொழில் மற்றும் வியாபார சூழல் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு முழு வெற்றி கிடைக்கும். உங்களின் சக்தியும், வேகமும் அதிகரிக்கும். பேச்சில் இனிமை இருக்கும். உங்கள் நண்பர்கள், உறவினர்களுடனான உறவில் இனிமை இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எல்லா முயற்சிகளிலும் மகிழ்ச்சியுடன் உதவுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். வழக்கமான வேலைகளை செய்து முடிக்க வித்தியாசமான முயற்சிகளால் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றியும், ஏற்றமும் இருக்கும். மற்றவர்களுடன் சேர்ந்து செய்கின்ற வேலையில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் பெறக்கூடிய சுகமான நாளாக இருக்கும். குடும்பத்திலும், பணியிடத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

தனுசு

தனுசு ராசியினர் மன உறுதியுடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய நட்பு உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு உதவியாக இருப்பார்கள். உங்களின் சாதுரியத்தால் அவர்களிடமிருந்து உதவி பெறுவீர்கள். மாணவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். உங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்களை அடைவதில் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்.

​மகரம்

மகர ராசிக்கு கலவையான பலன்கள் தரக்கூடிய நாளாக இருக்கும். சில யோசனைகளால் மனக்கவலையில் ஆழ்ந்திருப்பீர்கள். நீங்கள் உங்கள் வேலையில் சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்தால் சில தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ள நேரிடும். வேலை, தொழில் சார்ந்த திட்டங்களில் தடைகளை சந்திக்க நேரிடும். உடல்நிலை குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம். நிதி சிக்கல்களைத் தீர்க்க சிரமம் ஏற்படும்.

​கும்பம்

கும்ப ராசியினர் மிக சிறப்பாக செயல்படக்கூடிய நாளாக இருக்கும். எந்த ஒரு முயற்சிக்கும் ஏற்ற நல்ல காலமாக இருக்கும். சரியான திட்டமிடல் காரணமாக உங்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

வாழ்க்கைத் துணையுடன் மோதல் போக்கை தவிர்க்கவும். விட்டுக் கொடுத்துச் செல்வதும், அன்பான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவதும் அவசியம். இது உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.

​மீனம்

மீன ராசிக்கு வியாபார ரீதியான வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். பணியிடத்தில், பெரியவர்கள் முன்னிலையில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புதிய விஷயங்களை செய்ய முற்படுவீர்கள். சிலர் சுற்றுலா, கோயில் போன்ற இடங்களுக்குச் செல்வீர்கள். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்படுவீர்கள்.