முதல்முறையாக கரை ஒதுங்கிய ராட்சச மீன்!

0
310

நியூசிலாந்து நாட்டின் கடற்கரை ஒன்றில் ராட்சச மீன் கரை ஒதுங்கிய சம்பவம் பலரையும் திகைக்க வைத்துள்ளதுடன் அது குறித்த காணொளி சமூகவலத்தளங்களில் வரலாகிவருகின்றது.

நியூசிலாந்து நாட்டில் உள்ள டுனேடின் (Dunedin) கடற்கரை வழக்கம்போல சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து வழிந்தது. இந்நிலையில் பீச்சில் வாக்கிங் சென்ற ஐசக் வில்லியம்சன் என்பவர் தான் முதலில் அந்த ராட்சத உருவத்தினை பார்த்திருக்கிறார்.

அதன்பின்னர் அங்கு இருந்த கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த மீனை கண்டதும் திகைத்துப்போயிருக்கிறார். இதனை ஓட்டகோட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரிடி ஆலன் கடற்கரைக்கு நேரில் சென்றார்.

Gallery

அங்கு அவர் கண்ட காட்சியை அவராலேயே நம்பமுடியவில்லை. ஏனென்றால் அங்கே கரை ஒதுங்கி இருந்தது 12 அடி நீளமுள்ள ஓர் மீன் (oarfish)ஆகும். பாம்பு போன்ற உடலமைப்பை கொண்ட இந்த மீன் வழக்கமாக கடலில் 900 மீட்டருக்கு அடியில் மட்டுமே வாழும். படகின் துடுப்பு போல இவை உடலை அசைத்து முன்னேறுவதால் இதனை துடுப்பு மீன் என்றும் அழைக்கிறார்கள்.

இந்நிலையில் கரை ஒதுங்கிய மீன் குறித்து பேசிய டாக்டர் ஆலன் (Bridie Allan),

” அது உயிருடன் இருந்தது. ஆனால் அது மிகவும் பலவீனமாய் காணப்பட்டது. அதனை மீண்டும் நீந்த வைக்க எங்களது குழுவினர் முயற்சித்தனர். ஆனால் அது உயிர் பிழைத்திருக்காது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அது தண்ணீரில் நீந்தாமல் மேலே மிதந்தபடியே சென்றதாக கூறினார்.

குறித்த கடற்கரையில் நிறைய பள்ளத்தாக்குகள் இருப்பதாகவும் அவற்றிலிருந்து இந்த மீன் வந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டாலும் அவை அனைத்தும் யூகமே என்கிறார் ஆலன்.

அதேவேளை ஒடாகோ அருங்காட்சியகத்தில் இயற்கை அறிவியல் காப்பாளராக உள்ள எம்மா பர்ன்ஸ் இதுபற்றி கூறுகையில்,

“ஓர் மீனின் முதல் மாதிரிகளில் ஒன்று மற்றொரு ஒடாகோ கடற்கரையான மோராக்கியில் இருந்து சேகரிக்கப்பட்டு 1883 இல் லண்டனுக்கு அனுப்பப்பட்டது. அந்த 3.81 மீட்டர் மாதிரி இப்போது இயற்கை வரலாற்று அருங்காட்சியக சேகரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது” என்றார்.

மேலும் இந்த மீனை வரலாற்றில் சிலர் மட்டுமே பார்த்திருக்க முடியும் என்கிறார்கள் கடல்வாழ் உயிரியல் வல்லுநர்கள். பல மீட்டர் நீளம் வரையில் வளரக்கூடிய இந்த மீன் உலகம் முழுவதும் உள்ள கடல்களில் வசித்துவந்தாலும் இப்படி கரை ஒதுக்குவது மிகவும் அபூர்வம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.