பெண் பிரதமரை எதிர்பார்க்கும் பிரெஞ்சு மக்கள்!

0
28

இம்மானுவல் மக்ரோன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் தமது புதிய பிரதமரை அவர் அறிவிக்க உள்ளார்.

Édouard Philippe மற்றும் Jean Castex இனைத் தொடர்ந்து புதிய பிரமர் வரும் நாட்களில் அறிவிக்கப்பட உள்ளார். புதிய பிரதமருக்கான தேர்வு பட்டியலில் பலரது பெயர் முன்மொழியப்படுவதாக அறிய முடிகிறது. ‘சமூக, சுற்றுச்சூழல் தொடர்பாக அனுபவத்துடன் உள்ள ஒருவரே பிரதமராக தேர்தெடுக்க’ மக்ரோன் முனைப்புடன் இருப்பதாக எலிசே வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஆனால் பிரெஞ்சு மக்களின் நிலைப்பாடு என்ன?

ifop நிறுவனம் Journal du Dimanche ஊடகத்துடன் இணைந்து மேற்கொண்ட புதிய கருத்துக்கணிப்பில், நான்கில் மூன்று (74% வீதமானவர்கள்) பிரெஞ்சு மக்கள் ‘பெண் பிரதமர்’ ஒருவரை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். பெண்களில் 76% வீதமானவர்களும், ஆண்களில் 72% வீதமானவர்களும் இந்த கருத்துக்கணிப்பில் ‘பெண் பிரதமர் ஒருவரை ’ விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி பிரதமர் Jean Castex இன் தலைமையின் கீழ் பாராளுமன்ற கூட்டம் இடம்பெற உள்ளது. இந்த பாராளுமன்ற கூட்டம் பிரதமர் Jean Castex இன் இறுதி தலைமையிலான இறுதி கூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.