எரிவாயு விலை 5175 இல்லை என்றால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படும் – லிட்ரோ

0
486

12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5175 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இல்லை என்றால் காஸ் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என அவர் கூறினார்.எனவே எதிர்காலத்தில் எரிவாயு விலையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிக்கப்படாவிட்டால் நாளொன்றுக்கு 250 மில்லியன் ரூபா நட்டத்தை நிறுவனம் எதிர்கொள்ள நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்காலத்தில் எரிவாயுவுக்கான விலைச் சூத்திரம் கொண்டு வரப்படும் என அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.