அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு!

0
359

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் வியாழக்கிழமை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சபாநாயகர் அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமான 40 பேர் குழுவும் முன்மொழிந்;துள்ள அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் 21வது திருத்தம் என்பன தம்மிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள திருத்தம் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணை என்பதால், அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பியுள்;ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தாம்; இரண்டு முன்மொழிவுகளையும் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அமைச்சரவையே சட்டமா அதிபருக்கு அதனை பரிந்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

எனவே அரசியலமைப்பிற்கு எதிராக தம்மால் செயற்பட முடியாது என சபாநாயகர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.