எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை சமாளிக்க புதிய நடவடிக்கை

0
271

உலக நாடுகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வைரஸ் தொற்று சூழல்களை சமாளிக்க ஏதுவான புதிய நிதியை அமைக்க G20 உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.

அமெரிக்காவும் இந்தோனேசியாவும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த நீதி, உலக வங்கியில் வைக்கப்படக்கூடும்.

இருப்பினும், அத்தகைய நிதியை அமைப்பது, உலக சுகாதார அமைப்பை அல்லது மற்ற சர்வதேச சுகாதார அமைப்புகளை பலவீனமடைய செய்யும் என்ற அக்கறைகள் நிலவுகின்றன.

G20 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் சந்திக்கும் போது நிதி குறித்த விபரங்களை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

G20 அமைப்பு எவ்வளவு நிதியை திரட்ட விரும்புகிறது என்பது தெரியவில்லை.

வைரஸ் பரவல் தயார்நிலைக்காக ஆண்டுதோறும் சுமார் 10,5 பில்லியன் டொலர் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பும் உலக வங்கியும் முன்னதக மதிப்பிட்டன.

நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் தனக்குப் பங்கிருப்பது முக்கியம் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.