இலங்கைக்கு இனி வேறு வழியே இல்லை! விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டுள்ள நிலை!

0
524

தற்போது சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால், தற்போதைய நிதி நெருக்கடியின் பாதிப்பை இன்னும் 10 முதல் 15 வருடங்களுக்கு இந்நாட்டு மக்கள் அனுபவிக்க நேரிடும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை மீண்டு வருவதற்கு வழியில்லை. எனினும் இலங்கைக்கு வேறு வழியும் இல்லை. விரும்பியோ விரும்பாமலோ அங்கு செல்லவே நேரிடும்.

தற்போதைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பதில் கிடைக்கும் வரை மிகவும் மோசமான நிலைமை ஒன்றை எதிர்கொள்ள நேரிடும். நாட்டில் விற்பனை செய்வதற்கு ஒன்றும் இல்லை. அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இனி பொது மக்களை மாத்திரே விற்பனை செய்ய முடியும்.

வெளிநாட்டில் இருந்து இனிலேமல் ஒன்றும் கொண்டுவர முடியாது. இன்னும் 10 வருடத்திலேனும் நாடு மீண்டு வரும் என உறுதியாக கூற முடியாது. 40 வருடங்களுக்கு 4,5 பரம்பரைகளேனும் கடனை செலுத்த நேரிடும். எத்தனையே வருடங்கள் கூறிய போதிலும் அரசாங்கம் ஒரு போதிலும் செவி மடுக்கவில்லை. இனி நாங்கள் என்ன செய்ய முடியும்.

நாடும், நாடாளுமன்றமும் குப்பை தொட்டி போன்று உள்ளது. யாராளும் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் கடன் 52 பில்லியன் டொலர்கள் உள்ளது. 5 பில்லியன் சொத்துக்கள் கூட நாட்டில் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.