ரஷ்யாவினால் முற்றுகை இடப்பட்டுள்ள தொழிற்சாலைக்குள் சிக்கித்தவிக்கும் பொதுமக்கள்!

0
380

ரஸ்ய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள இரும்பு தொழிற்சாலையின் தரைப்பகுதி பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது

அங்கு பொதுமக்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும், பலர் இறந்துள்ளதாகவும் மரியுபோலில் உள்ள கடைசி உக்ரைனிய பாதுகாவலர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மரியுபோலின் கடைசி பகுதி ரஷ்ய கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தாம், அங்கு இருக்கும் வரை, மரியுபோல் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அந்த பாதுகாவலர் கூறியுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின், குறித்த தொழிற்சாலை மீதான தாக்குதல் திட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டார். 4

பதிலாக தொழிற்சாலையில் இருந்து எவரும் தப்பிச்செல்லாதபடி அதனை மூடுமாறு தனது துருப்புக்களுக்கு உத்தரவிட்டார்

ரஷ்யர்கள் போர்க்கப்பல்களில் இருந்து இந்த ஆலை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தொழிற்சாலையின் அடித்தளத்தில் பொதுமக்களும் பாதுகாவலர்களும் தனித்தனி இடங்களில் உள்ளனர்.

எனினும் தாக்குதல்களால் கட்டிடங்கள் அழிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் இடத்துக்கு பாதுகாவர்களால் செல்லமுடியாதுள்ளதாக குறித்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

அவர்களுடன் தொடர்புகொள்ளமுடிகிறது பொதுமக்கள் மத்தியில் மூன்று மாத குழந்தைகளும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் தொழிற்சாலையில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பான பாதை வழங்கப்பட வேண்டும்

அத்துடன் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பவராக மூன்றாவது நாடு அல்லது சர்வதேச அமைப்பு செயல்பட வேண்டும் என்று பாதுகாவலர் கோரிக்கை விடுத்துள்ளார்