இன்றைய ராசிபலன் {22 ஏப்ரல் 2022} : Daily Horoscope, April 22

0
591

மேஷம்

மனம் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி காக்க முயற்சி செய்யுங்கள். வீண் விவாதம் வேண்டாம். தொழில், வியாபாரம் மேம்படும். நண்பரின் உதவியால் வருமானம் உயர வாய்ப்பு ஏற்படும். நீங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சுவையான உணவில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம். தாயிடமிருந்து நிதி சார்ந்த உதவி பெறலாம்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள், முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும். வாழ்க்கை குழப்பமான சில சூழல் இருக்கும். நம்பிக்கை குறையும். செலவுகள் அதிகமாக இருக்கும். மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படலாம்.
இருப்பினும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கு நிச்சயம் நற்பலன் கிடைக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும். மனதுக்கு பிடித்தவர், நண்பர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை மேம்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும், ஆனால் கடின உழைப்பு அதிகமாக தேவைப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் சேமித்த நிதி குறையலாம். குடும்பப் பொறுப்புகள் கூடும். விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் இருக்கும்.

கடகம்

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். மரியாதை கூடும். பெரிய மனிதரின் சந்திப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. சில விஷயங்களை எண்ணி பயத்தால் நீங்கள் மன அமைதி இழக்க நேரிடலாம். உத்தியோகஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும். வாழ்க்கை குழப்பமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

சிம்மம்

பொறுமையாக இருக்க வேண்டிய நாள். தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். பெற்றோரிடமிருந்து நிதி உதவியைப் பெறலாம். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. மனம் சஞ்சலமாக, மன உளைச்சலாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் கோபம் மற்றும் அதீத ஈடுபாட்டைத் தவிர்க்கவும்.

கன்னி

இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் தன்னடக்கத்துடன் செயல்படுவது அவசியம். எதிலும் பொறுமையாகவும், விடா முயற்சியும் தேவை. வியாபாரத்தில் கவனம் செலுத்தவும். சில சிரமங்கள் சந்தித்தாலும், முடிவு சிறப்பாக இருக்கும் என்பதால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். வருமான வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்ற பாதை அமையும்.

துலாம்

நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். புதிய பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டு. தொழில் ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

வேலைக்கு செல்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் முடிந்த வரை வேலையை துரிதமாக செயல்பட்டால் வெற்றிகள் குவியும். நண்பர்கள் மூலம் ஒரு ஏற்றமிகுந்த பலன் உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

விருச்சிகம்

மன அமைதி ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. வருமானம் அதிகரிக்கும். வண்டி, வாகனம் வாங்க வாய்ப்புகள் உள்ளன. சுவையான உணவில் ஆர்வம் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும். பயணம் செல்ல நேரிடலாம்.

தனுசு

நீங்கள் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பேச்சில் சற்று நிதானமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பண வரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம். தொழில், வியாபாரத்தைப் பொறுத்தவரை உங்கள் வேலையாட்களால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம்.

முடிந்தவரை உடன் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் ஒரு வளமான பலனை அடைவீர்கள். வேலைப் பளு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் உடல் அசதி ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும்.

மகரம்

நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் ஏற்றம் மிகுந்த பலனை பெறக்கூடிய நாளாக இருக்கும். இருக்கும் இடத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படுங்கள்.

தொழில் ரீதியாக சிறிய தடைகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றி அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதை திறம்பட எதிர்கொண்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். பழிச்சொற்கள் நீங்கும். நண்பர்களால் சாதகமான பலனைப் பெறலாம்.

கும்பம்

நிங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கு முயற்சியில் சாதகமான பலனை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் உங்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நல்ல நட்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

பொருளாதார ரீதியான சிறு குறைபாடு இருக்க வாய்ப்புள்ளதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். அரசு வழியில் உங்களுக்குச் சாதகமான பலனைப் பெறக்கூடிய நாள்.

மீனம்

நீங்கள் எதிலும் சற்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் தடைப்பட வாய்ப்புள்ளது. அதனால் எந்த ஒரு செயலையும் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் நிதானம் தேவை. சிக்கனமாக இருப்பதோடு, புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சற்ற் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மேலதிகாரிகளுடன் பேசும் போது வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். குறிப்பாக தூரப்பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்