அமெரிக்கா மற்றும் தென் கொரியா வடகொரியாவிடம் விடுத்த முக்கிய கோரிக்கை!

0
572

வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன.

வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை அந்த நாடு வெற்றிகரமாக பரிசோதித்தது.

அமெரிக்கா வரை சென்று தாக்கும் அளவுக்கு அந்த ஏவுகணை திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிகழாண்டில் 13-ஆவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓா் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது.

அணு ஆயுதம் பொருத்தக்கூடிய இந்த ஏவுகணை குறைந்த தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என நிபுணா்கள் சிலா் தெரிவித்துள்ளனா்.

விரைவில் வடகொரியா அணு ஆயுத சோதனையையும் நிகழ்த்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இத்தகைய ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருவதாகவும் நிபுணா்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில், வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம்(Sang Kim), கொரிய தீபகற்பத்துக்கான தென் கொரியாவுக்கான சிறப்புப் பிரதிநிதி நோ கியு-டுக்கை சியோலில்(No Qiu-duk, in Seoul) திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது; வடகொரியாவின் சீா்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடியை அளிக்க வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளோம்.

வடகொரியாவுக்கான எதிரான நோக்கம் எதுவும் இல்லை. அந்த நாட்டுடன் எந்த நிபந்தனையுமின்றி பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது. வடகொரியாவும் பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றனா்.