முகநூலில் வாழ்த்துக்களை தெரிவித்த நாமல் ராஜபக்ஷ!

0
383

இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (18-04-2022) அமைச்சரவை நியமனம் பெற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தருணத்தில் நாட்டுக்காக பங்காற்றுவதற்கு உங்கள் அனைவருக்கும் பெரும் பங்குள்ளது.

இறைவனின் அருளால் நீங்கள் அனைவரும் அப்பணிகளை நிறைவேற்ற பிரார்த்திக்கிறேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.