ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

0
37

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர்களைச் சோதனையிட்டனர்.

இதன்போது அவர்களது உடைமையிலிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளினை மீட்டனர்.

குறித்த இளைஞர்களைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.

Gallery