பதவி விலகும் மகிந்த: இளம் அரசியல்வாதிக்கு பிரதமர் பதவி

0
38

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு இளம் அரசியல்வாதி ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்காக பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினால், பெரும்பாலும் அந்த பதவி அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்படலாம் எனவும் ரமேஷ் பத்திரன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயரும் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய மகிந்த ராஜபக்ச கட்டாயம் பிரதமர் பதவியை கைவிட எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் கடந்த 3 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்திருந்ததுடன் சில அமைச்சர்களின் வலியுறுத்தல் காரணமாக அந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டார்.