அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய காவல் அதிகாரி கைது!

0
59

அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய காவல் அதிகாரியை காவல் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். என்னைப் போல முதுகெழும்பு உள்ள நாட்டின் நெருக்கடி நிலைமையை புரிந்துகொண்ட காவல் அதிகாரிகள் இங்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த அதிகாரியை தற்போது பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.