கரவெட்டியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு

0
58

வடமராட்சி கரவெட்டி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம அலுவலர் பிரிவில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

நேற்று மதியம் 2 மணியளவில் சமையல் செய்யும் போது அடுப்பு வெடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அருகில் யாரும் இல்லாததால் காயம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.