இலங்கையின் தற்போதைய நிலை – சீனா வெளியிட்ட அறிவிப்பு

0
45

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு சீனா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை, சீனாவிடம் நிதி உதவி கோரிய நிலையிலேயே சாவோ லிஜியன் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்காக சீனா தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகவும், தொடர்ந்தும் அதனைச் செய்யும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு சீனா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றது என்றும், அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால இராஜதந்திர உறவுகளை நிறுவியதில் இருந்து இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவை வழங்கியுள்ளன என்றும் ஜாவோ லிஜியன் குறிப்பிட்டார்.

“சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவையும் புரிந்துணர்வையும் வழங்கியுள்ளன” என்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜாவோ மேலும் தெரிவித்தார்.