சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை – இதுவரை 68 பேர் கைது

0
545

விற்பனை செய்தமைக்காக 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கைது செய்ப்பட்டவர்களிடம் இருந்து 8,025 லீட்டர் பெட்ரோலும் 726 லீட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது  நாடளாவிய ரீதியில் காவல்துறையினர் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகப்படியான எரிபொருளை கொள்வனவு செய்து வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் பலர் சட்டவிரோத வியாபாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த மோசடியானது வாகனங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் நிற்கும் பல நபர்களை பாதித்துள்ளது.

இதேவேளை, பொதுமக்களை ஏமாற்றும் இவ்வாறான நபர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். 
Gallery