உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்!

0
895

அன்றாட வாழ்கையில் தினமும் பழங்களை சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பழங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. பழங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் காரணமாக நம் உடலில் எப்போதும் புத்துணர்ச்சி இருக்கிறது.

சில பழங்கள் நமது உடல் எடை குறைப்புக்கும் காரணமாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சில பழங்களை தங்களின் சிறந்த நண்பர்களாக்கிக் கொள்வது நல்லது. இவற்றின் உதவியுடன் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

உடல் எடை குறைப்பு: பம்பளிமாஸ் பழம் எடை குறைக்க உதவும். இந்த பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையை சேர்ந்தது. இந்த பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்துபோல இருக்கும். ஆரோக்கிய நிபுணர்களின் படி, பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது உங்கள் எடையைக் குறைக்கும்.

இருப்பினும், இந்த பழத்தை பற்றி பலருக்குத் தெரிவதில்லை. இதை நீங்களும் இதுவரை சாப்பிட்டது இல்லை என்றால், உடனடியாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உது உங்கள் உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவும். 

ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடை குறையும் : ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்ற கூற்று உள்ளது. அது உமைதான்! ஆப்பிளிலும் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆப்பிள் பழம் எடை இழப்புக்கு உதவியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆப்பிளில் சுமார் 110 கலோரிகள் இருக்கின்றன. இது உடலுக்கு ஆண்டி ஆக்சிடெண்டுகளை வழங்குகிறது. ஆப்பிள் பழம் உங்கள் ஆரோக்கியத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆப்பிள் உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

உணவில் பெர்ரி பழங்களை சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும் : பெர்ரி சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம். உங்கள் உணவில் தினமும் அரை கப் பெர்ரி சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு 42 கலோரிகளை வழங்குகிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது உடலில் சுமார் 12 சதவீதம் வைட்டமின்-சி மற்றும் மாங்கனீசை வழங்குகிறது.

கிவி பழம் உடல் எடையை குறைக்கும்: கிவி பழம் உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. இது ஊட்டச்சத்து நிறைந்த பழமாக கருதப்படுகின்றது. இந்த பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.