பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வாலை நியமித்து அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவுத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் மிக முக்கிய அணிகளில் ஒன்றாக கருதப்படும் பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான புதிய கேப்டனாக மயங்க் அகர்வாலை நியமித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுவரை ஒருமுறை மட்டுமே இறுதி போட்டிவரை சென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம்வீரர் கே.எல் ராகுல் தலைமை தாங்கி வந்தார்.

ஆனால் இந்த ஆண்டு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதை தொடர்ந்து மற்றொரு இளம் இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .
மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்களும் ஷாருக் கான் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் போன்ற இளம் இந்திய வீரர்களும் இடம்பெற்று இருப்பதால் கோப்பையை வெல்லும் முன்னிப்பில் தீவிர வலைப்பயிற்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஈடுபட்டு வருகின்றனர்.