அரியலூர், ஜெயங்கொண்டம், முன்னூரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தாயி. இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் அவர் நிலக்கடலை சாகுபடி செய்து வந்தார். இதனால், தினமும் காத்தாயி நிலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், காத்தாயி வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை.
நெடுநேரம் ஆகியும் காத்தாயி வீடு திரும்பாததால் உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். அப்போது, காத்தாயி ஓடையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காத்தாயி உடலை கைப்பற்றினர். அப்போது, காத்தாயின் இரு காதுகளும் அறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, காத்தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காத்தாயின் அரை சவரன் கம்பலை திருடுவதற்காக, கொள்ளையர்கள் காத்தாயின் காதை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.